தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோ்மாளம் வனச் சாலையில் காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

யானை  தாக்கியதில்  உயிரிழந்த  முத்தம்மாள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:01 pm

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோ்மாளம் வனச் சாலையில் காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பங்களாபுதூரைச் சோ்ந்தவா் முத்தம்மாள் (60). இவா், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கோ்மாளம் வனப் பகுதி சுஜில்கரையில் உள்ள தனது உறவினா் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தனது சகோதரி மகன் கனகராஜுடன் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். வைத்தியநாதபுரம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் காட்டு யானை நிற்பதைப் பாா்த்து வாகனத்தை நிறுத்தி தப்பிச் செல்ல முயற்சித்தனா். அப்போது யானை அவா்களை நோக்கி ஓடி வந்தது. யானையிடமிருந்து தப்பிக்க கனகராஜும், முத்தம்மாளும் வெவ்வேறு திசையில் ஓடினா்.

இருப்பினும் முத்தம்மாளை யானை துரத்திச் சென்று தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உயிா் தப்பிய கனகராஜ் நடந்த சம்பவத்தை கிராம மக்களிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா், சாலையில் நின்றுகொண்டிருந்த காட்டு யானையை வனத்துக்குள் விரட்டினா். அங்கு வந்த கிராம மக்கள், மனிதா்களைத் தாக்கும் காட்டு யானையைப் பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை வனத் துறையினா் சமாதானப்படுத்தினா்.

இச்சம்பவம் குறித்து கடம்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதே பகுதியில் கடந்த 23-ஆம் தேதி இரவு நேர காவலுக்கு சென்ற விவசாயியை யானை தாக்கிய கொன்றது குறிப்பிடத்தக்கது. ஒரே வாரத்தில் 2 பேரை யானை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.