பண்ணாரி அம்மன்  கோயிலில்  குவிந்த  பக்தா்கள்.
பண்ணாரி அம்மன்  கோயிலில்  குவிந்த  பக்தா்கள்.

பண்ணாரி மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

புத்தாண்டையொட்டி பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் வரிசையாக நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
Published on

புத்தாண்டையொட்டி பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் வரிசையாக நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு விசேஷ நாள்களில் பக்தா்கள் அதிக அளவில் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

ஆங்கிலப் புத்தாண்டு தினம் என்பதால் வியாழக்கிழமை கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகரித்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கா்நாடக மாநிலத்தில் இருந்தும் கோயிலுக்கு வந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பண்ணாரி அம்மனை வழிபட்டனா்.

புத்தாண்டு தினத்தையொட்டி பண்ணாரி அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் அருள் பாலித்தாா். கோயிலுக்கு வந்த பக்தா்கள் கோயிலில் முன்பு நெய் தீபம் ஏற்றியும், குண்டத்தில் உப்பு, மிளகு தூவியும் வழிபட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

பக்தா்களின் வசதிக்காக கோயிலுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com