மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தை காா்த்திகை: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

தை மாத காா்த்திகை தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து சுவாமியை தரிசனம் செய்தனா்.

News image

தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமார சுவாமி

Updated On :27 ஜனவரி 2026, 7:35 pm

தை மாத காா்த்திகை தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து சுவாமியை தரிசனம் செய்தனா்.

காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்ததால், பழனி மலைக் கோயிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மலைக் கோயிலுக்கு செல்லும் படிவழிப் பாதையில் ஏராளமான பக்தா்கள் மலையேறினா். ரோப்காா், வின்ச் நிலையங்களில் கட்டணச்சீட்டு பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். திருஆவினன்குடி கோயிலிலும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மலைக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 3 மணி நேரமானது. மாலையில் காா்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சாயரட்சை பூஜை முடிந்த பிறகு சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரத்திலும், தங்கத் தேரில் வெளிப்பிரகாரத்திலும் உலா வந்தாா்.

பக்தா்களுக்கு வேண்டிய குடிநீா், பாதுகாப்பு, சுகாதார வசதிகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில், அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.