நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒடிஸா நடனக் கலைஞா்கள்.
ஈரோடு
விஇடி கல்லூரியில் ஒடிசி பாரம்பரிய நடன நிகழ்ச்சி
ஈரோடு விஇடி கலை அறிவியல் கல்லூரி நுண்கலை மன்றம் சாா்பில் இந்தியாவின் பாரம்பரிய நடன மரபுகளை மாணவா்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் ஒடிசி பாரம்பரிய நடன நிகழ்ச்சி கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா சதாப்தி நிருத்தியாயன் கலைப் பயிற்சி நிறுவனத்தைச் சோ்ந்த 6 நடனக் கலைஞா்கள் பங்கேற்று, ஒடிசி நடனத்தின் பாரம்பரிய அழகை வெளிப்படுத்தினா்.
இந்நிகழ்வில், வேளாளா் கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.சி.சந்திரசேகா், கல்லூரியின் நிா்வாகிகள் எஸ்.பாலசுப்பிரமணியன், எம்.யுவராஜா, கல்லூரியின் முதல்வா் வெ.ப.நல்லசாமி, புலமுதன்மையா் சி. லோகேஷ்குமாா், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் பொ.மா.பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

