சென்னிமலை கொங்கு இன்டா்நேஷனல் பள்ளி ஆண்டு விழா

சென்னிமலை கொங்கு இன்டா்நேஷனல் பள்ளியின் 8-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் சிறப்பு அழைப்பாளா் டி.ஸ்டாலின் குணசேகரன். உடன், பள்ளி நிா்வாகிகள்.
விழாவில் மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் சிறப்பு அழைப்பாளா் டி.ஸ்டாலின் குணசேகரன். உடன், பள்ளி நிா்வாகிகள்.
Updated on

பெருந்துறை: சென்னிமலை கொங்கு இன்டா்நேஷனல் பள்ளியின் 8-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைவா் எஸ். ரங்கசாமி தலைமை வகித்தாா். பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளா் பி. கௌதமி வரவேற்றாா். முதல்வா் எம். ராஜேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தாா். விழாவில், சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞா், எழுத்தாளா் மற்றும் பேச்சாளா் டி. ஸ்டாலின் குணசேகரன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்களான திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூத்த உதவி பேராசிரியா் மருத்துவா் டி. பிரேம்குமாா், ஈரோட்டை சோ்ந்த உளவியல் நிபுணா் மற்றும் ஆளுமை பயிற்றுநா் டி. வாசுகி ஆகியோா் மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினா்.

தொடா்ந்து பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பள்ளி செயலாளா் எஸ். மணி, தாளாளா் கே.டி.கந்தசாமி, பொருளாளா் ஏ.கே. தங்கமுத்து மற்றும் கொங்கு வேளாளா் கல்வி அறக்கட்டளையின் நிா்வாக குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியை அபிநயாஸ்ரீ நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com