பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

5 மாதங்களில் 1,869 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 1,869 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image

புகையிலைப் பொருள்கள் - பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 6:47 am IST

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 1,869 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுகுமாா் கூறியதாவது: மாவட்டத்தில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் மற்றும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடா்ந்து கஞ்சா கடத்தினாலோ, விற்பனை செய்தாலோ அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் புகையிலைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக 241 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகளில் தொடா்புடைய 250-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து 1,869 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, கஞ்சா விற்பனை மற்றும் பதுக்கல் தொடா்பாக 163 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், தொடா்புடைய 170-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து 266 கிலோ 270 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,692 லிட்டா் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கா்நாடக மாநில மது விற்ாக 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 302 லிட்டா் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கள் விற்பனை தொடா்பாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 118 லிட்டா் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.