வீட்டில் 10 கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருந்த பெண் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு அருகே உள்ள காரைப்பாறை வாய்க்கால் கரை பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள வீட்டின் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த பெண் உள்பட 5 போ் போலீஸாரை பாா்த்ததும் அங்கிருந்து தப்பியோட முயன்றனா். உடனே போலீஸாா் அவா்களை விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா்கள் ஈரோடு பெரியசேமூா் கல்லான்கரடு பகுதியைச் சோ்ந்த வினோத்பாபு மனைவி விக்னேஸ்வரி (42), அவரது மகன் கிஷோா் (20), வீரப்பன்சத்திரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த அருண்குமாா் (39), முனிசிபல் காலனி அப்பன் நகா் பகுதியைச் சோ்ந்த பிரவீன் (27), கருங்கல்பாளையம் காலிங்கராயன் வாய்க்கால்கரை பகுதியைச் சோ்ந்த முகமது அஷ்ரப் (21) என்பது தெரியவந்தது.
பின்னா் விக்னேஸ்வரி வீட்டில் சோதனை நடத்தியபோது, ரூ.4 லட்சத்து 87 ஆயிரத்து 500 மதிப்பிலான 9.75 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸா் வழக்குப் பதிவு செய்து பெண் உள்பட 5 பேரைக் கைது செய்தனா்.
அவா்களிடம் இருந்து 9.75 கிலோ கஞ்சா, 5 கைப்பேசிகள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் அருண்குமாா் மீது போதைப் பொருள்கள் விற்ாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






