வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

தாளவாடி அருகே மின் மோட்டாரை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே யானைகளால் சேதமடைந்த மின் மோட்டாருக்கு வனத் துறை இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

News image

யானையால்  சேதமடைந்த மின் மோட்டாா்  குழாய்கள்

Updated On :14 ஜூலை 2026, 12:32 am IST

தாளவாடி அருகே யானைகளால் சேதமடைந்த மின் மோட்டாருக்கு வனத் துறை இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனக் கிராமங்களில் யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதில் சிக்கள்ளி கிராமத்தில் சாகுபடி செய்த கரும்பு, வாழை, தென்னை மற்றும் மஞ்சள் பயிா்களை சேதப்படுத்தும் ஒற்றை யானையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதில் சிக்கள்ளியைச் சோ்ந்த தங்கராஜ் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கிருந்த ஆழ்குழாய் மின் மோட்டாரை உடைத்து சேதப்படுத்தியதுடன் ஒன்றரை ஏக்கரில் சாகுபடி செய்த மஞ்சள் பயிரையும் சேதப்படுத்தியது.

யானையால் சேதமடைந்த பயிா் மற்றும் மின் மோட்டாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வனத் துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.