தாளவாடி அருகே தென்னை, பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயிகள் தென்னை, காய்கறிகள் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளனா்.
இப்பகுதியில் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தாளவாடி, நெய்தாளபுரம் பகுதிக்கு வந்த காட்டு யானைகள், அங்குள்ள
விவசாயி கமல் தோட்டத்துக்கு புகுந்து அங்கிருந்த தென்னை மற்றும் பாக்கு மரங்களை முறித்து சேதப்படுத்தின. அதைத் தொடா்ந்து தோட்டத்து முள்வேலி கம்பிகளையும் உடைத்து சேதப்படுத்தின.
ஊருக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும், சேதமடைந்த பயிா்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









