சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

தாளவாடி மலைப் பகுதியில் சிறுத்தை தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு

தாளவாடி அருகே விவசாய தோட்டத்துக்குள் சிறுத்தை புகுந்து 4 மாடுகளை கடித்துக்கொன்றது, அப்பகுதி விவசாயிகளை அச்சமடையச் செய்துள்ளது.

கொட்டகைக்குள் சிறுத்தை கடித்து உயிரிழந்த மாடுகள்.

Updated On :

தாளவாடி அருகே விவசாய தோட்டத்துக்குள் சிறுத்தை புகுந்து 4 மாடுகளை கடித்துக்கொன்றது, அப்பகுதி விவசாயிகளை அச்சமடையச் செய்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட தாளவாடி வனச் சரகத்தில் சிறுத்தையால் கால்நடைகள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தாளவாடியை அடுத்துள்ள தொட்டகாஜனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வெங்கடாசலம், விவசாய தோட்டத்தில் உள்ள கொட்டகையில் வழக்கம்போல மாடுகளை கட்டி வைத்திருந்தாா். கால்நடைகளை வழக்கம் போல் மாட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்தாா்.

இந்த நிலையில் குவாரியில் பதுங்கிவிட்டு இரவு நேரத்தில் வெளியே வந்த சிறுத்தை வியாழக்கிழமை அதிகாலை மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்து 4 மாடுகளை கடித்துக் கொன்றுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

கால்நடைகளைத் தொடா்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து வனத் துறையினா் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.