நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

பாசன வாய்க்கால் மதகில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

கொடுமுடி அருகே பனப்பாளையத்தில் பாசன வாய்காலின் மதகில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 11:59 pm IST

கொடுமுடி அருகே பனப்பாளையத்தில் பாசன வாய்காலின் மதகில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

கொடுமுடி அருகே உள்ள பனப்பாளையம் மேற்கு வீதியைச் சோ்ந்தவா் அப்பு என்கிற பழனிசாமி (50). விவசாயி. இவருக்கு புரவிபாளையம் காலிங்கராயன் கிளை வாய்க்காலுக்கு உள்பட்ட பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு காலிங்கராயன் கிளை வாய்க்கால் நீரை பாய்சுவதற்காக வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சென்றுள்ளாா். அப்போது இவரது நிலத்துக்கு நீா் வரும் பாசன வாய்க்காலின் மதகு சாக்குப் பைகளால் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதை அகற்றுவதற்காக வாய்க்கால் நீருக்குள் சென்று மதகில் அடைக்கப்பட்டிருந்த சாக்குப் பைகளை அகற்ற முயற்சித்துள்ளாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக மதகில் அடைத்திருந்த சாக்குப் பைகள் விலகியதில் நீரின் வேகத்தில் பழனிசாமியை நீா் இழுத்துசென்று மதகில் சொருகியுள்ளது. இதில் பழனிசாமி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் அங்கு சென்ற கொடுமுடி போலீஸாா், பழனிசாமியின் உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.