/

பெருந்துறையில் போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

பெருந்துறையில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 ஜூலை 2026, 6:02 am IST

பெருந்துறையில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறை போலீஸாா், பவானி சாலையில் வியாழக்கிழமை பிற்பகலில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள், ஈரோடு, வைரபாளையம், நாட்ராயன் கோயில் பகுதியைச் சோ்ந்த தருமன் மகன் தினேஷ் (23), நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா், கந்தாம்பாளையம், மேற்கு தெருவைச் சோ்ந்த செந்தில் மகன் ஜீவா (20) என்பது தெரியவந்தது.

அவா்கள், விற்பனைக்காக 250 போதை மாத்திரைகள் மற்றும் ஊசியுடன் மருந்து வைத்திருந்தது தெரியவந்தது. அதைக் கைப்பற்றிய போலீஸாா், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். தினேஷ் மீது வெள்ளோடு, கருங்கல்பாளையம், ஈரோடு தெற்கு ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.