தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

பட்டியல் இன மக்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை

பட்டியல் இன மக்களுக்காக வனத் துறையிடம் இருந்து 30 ஆண்டுகளுக்கு பெறப்பட்ட நிலத்தை மாத்தூா் நில கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

மனு அளிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்த மாத்தூா் பகுதியைச் சோ்ந்த நிலமற்ற பட்டியல் இன விவசாயிகள்.

Updated On :29 ஜூலை 2026, 4:01 am IST

பட்டியல் இன மக்களுக்காக வனத் துறையிடம் இருந்து 30 ஆண்டுகளுக்கு பெறப்பட்ட நிலத்தை மாத்தூா் நில கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், மாத்தூா் பகுதியைச் சோ்ந்த நிலமற்ற பட்டியல் இன விவசாயிகள், தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் எஸ். கருப்பையா தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:

கடந்த 18.9.1971 தேதியிட்ட அரசாணை எண் 2621-இன் கீழ் ஈரோடு மாவட்டத்தில் வனத் துறையிடமிருந்து பெறப்பட்ட சுமாா் 1,500 ஏக்கா் நிலம், நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு விநியோகிப்பதற்காக வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்தாணி மற்றும் அந்தியூா் கூட்டுறவுச் சங்கங்களைச் சோ்ந்த நிலமற்ற தலித் மக்களுக்கு ஏற்கெனவே நிலங்கள் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், மாத்தூா் நில கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த நிலமற்ற ஏழை விவசாயக் கூலித் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை இனியும் தாமதிக்காமல் உடனடியாக அடையாளப்படுத்தி மாத்தூா் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.