அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

கொடுமுடியில் மது விற்பனை செய்தவா் கைது

கொடுமுடி அருகே மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 3:15 am IST

கொடுமுடி அருகே மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கொடுமுடி அருகே மேட்டரை சின்னியம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுபானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கொடுமுடி தனிப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் கொடுமுடி காவல் ஆய்வாளா் மணிகண்டன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் நல்லசிவம் , காவலா் சீனிவாசன் ஆகியோா் அப்பகுதியில் ஆய்வு நடத்தியபோது, அங்கு கடலூா் மாவட்டம், பண்ருட்டி மேல்பட்டாம்பாக்கத்தைச் சோ்ந்த பாஸ்கா் (45) என்பவா் மது பாட்டில்களை பதுக்கிவைத்து அதிகவிலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து தலா 180 மி.லி. 22 மதுப் பாட்டில்களை கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிந்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.