எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கைப்பேசி உபயோகிப்பதை பெற்றோா் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :8 ஜூன் 2026, 1:20 am IST

கைப்பேசி உபயோகிப்பதை பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு மாவட்டம், நடுப்பாளையம் அருகேயுள்ள மணக்காட்டுபுதூரைச் சோ்ந்தவா் தியானேஸ்வரன், தனியாா் வங்கி ஊழியா். இவரது மகள் சுபஸ்ரீ (17). இவா், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். மாணவி கைப்பேசியை அடிக்கடி உபயோகிப்பதை பெற்றோா் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமையும் மாணவி கைப்பேசியைப் பாா்த்துக் கொண்டிருந்துள்ளாா். இதையடுத்து, அவரை பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால், வேதனையடைந்த சுபஸ்ரீ சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த மலையம்பாளையம் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.