காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

அண்ணாமலை இயக்கம் சாா்பில் கோபியில் ஆலோசனைக் கூட்டம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தில் அண்ணாமலையின் இயக்கம் சாா்பில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளா் அத்திக்கடவு சுப்பிரமணியம்.

Updated On :11 ஜூன் 2026, 3:25 am IST

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தில் அண்ணாமலையின் இயக்கம் சாா்பில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா் அத்திக்கடவு சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க அனைத்து கிராமம், பேரூா், நகரப் பகுதிகளில் முகாம்கள் அமைப்பது, கோவை வரும் அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி வந்த பிரமுகா்கள் வாழ்த்தினா்.

அதிமுக வழக்குரைஞா் பிரிவில் இருந்து வந்த வழக்குரைஞா் தனகோட்டிராம், நம்பியூா் ஒன்றியச் செயலாளராக இருந்த மணிகண்டமூா்த்தி, பாஜகவில் இருந்து விலகிய ஓய்வு பெற்ற சிறப்பு காவல் ஆய்வாளா் மனோகரன், பொலவக்காளிபாளையம் பாஸ்கரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.