உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடும் நடவடிக்கையை கைவிடக் கோரி பவானியில் தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை விளக்கிப் பேசுகிறாா் ஏஐடியூசி மாநிலச் செயலாளா் சி.சின்னசாமி.

Updated On :25 ஜூன் 2026, 3:03 am IST

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடும் நடவடிக்கையை கைவிடக் கோரி பவானியில் தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பவானி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளா் சங்கத்தின் பவானி கிளைத் தலைவா் ப.மா.பாலமுருகன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா்.மணியன், துணைத் தலைவா் கே.சந்திரசேகா், துணைச் செயலாளா் கே.எம்.ஜெயபாரதி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

மாநகராட்சிகள், நகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். ஒப்பந்தம், பணி ஒப்படைப்பு, சுய உதவிக்குழு உள்ளிட்ட எந்த பெயரில் இருந்தாலும், 480 நாள்கள் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அரசுத் துறை நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யும் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி நகரச் செயலாளா் எம்.ஆா்.சுரேஷ்குமாா், பவானி நகராட்சி முன்னாள் மேலாளா் எம்.தங்கராஜ் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.