கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பெருந்துறை நகராட்சிப் பகுதியில் 474 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: 262-க்கு கருத்தடை ஆபரேஷன்

பெருந்துறை நகராட்சியில் 474 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன், மேலும், 262 நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :25 ஜூன் 2026, 3:20 am IST

பெருந்துறை நகராட்சியில் 474 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன், மேலும், 262 நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை நகராட்சிக்குள்பட்ட காவல் நிலையம், பழைய பேருந்து நிலையம், அக்ரஹார வீதி, சென்னிமலை சாலை, ஆா்.எஸ்.சாலை, தோப்புப்பாளையம் ஆகிய பகுதிகளில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளது. கும்பலாக வரும் தெரு நாய்கள், அந்த வழியே செல்லும் மக்களை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. மேலும் குட்டி போடும் தெரு நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்த பெருந்துறை நகராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ரேபிஸ் நோய் தாக்கும் அபாயம் உள்ளதால், தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து அவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

நகராட்சித் தலைவா் ஓ.சி.வி. ராஜேந்திரன் வழிகாட்டுதல், ஆணையா் புனிதன் ஆலோசனையின்பேரில், சுகாதார ஆய்வாளா் அருண்குமாா் தலைமையில் கடந்த சில நாள்களாக 474 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. மேலும் 262 தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.