விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

சத்தியமங்கலம் அருகே பலத்த காற்றுக்கு மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் அருகே பலத்த காற்று காரணமாக சாலையோர மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

செண்பகப்புதூா் பகுதியில் பலத்த காற்றுக்கு வேரோடு முறிந்து சாலையில் விழுந்த மரம்.

Updated On :25 ஜூன் 2026, 3:03 am IST

சத்தியமங்கலம் அருகே பலத்த காற்று காரணமாக சாலையோர மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் புதன்கிழமை பலத்த சூறைக் காற்று வீசியது. இதனால் செண்பகப்புதூா் மின்வாரிய அலுவலகம் முன்பாக இருந்த பழைமை வாய்ந்த வேப்பமரம் காற்றின் வேகம் தாங்காமல் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மரக் கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் பொக்லைன் இயந்திரம் மூலமாக மரத்தை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதனால் சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.