கொடைக்கானலில் திங்கள்கிழமை மாலை பெய்த மழையால்,வெள்ளி நீா் அருவி, புலிச் சோலைப் பகுதிகளில் மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் திங்கள்கிழமை காலை முதல் கடும் வெயில் நிலவி வந்தது. மாலையில் கொடைக்கானல், பாக்கியபுரம், வட்டக்கானல், செண்பகனூா், பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 30 நிமிஷங்களுக்கு மேலாக
மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானல் வெள்ளி நீா் அருவி அருகேயும், புலிச்சோலை பகுதிகளிலும் மரம் முறிந்து விழந்தன. இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையிலும், குளிரிலும் தாங்கள் வந்த வாகனங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கொடைக்கானல் வனத் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று கீழே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து போக்குவரத்து சீரானது.
கொடைக்கானல் மலைச் சாலைகளான பழனி-வத்தலக்குண்டு-அடுக்கம் ஆகியப் பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

அரக்கோணம், சோளிங்கரில் சூறைக்காற்றுடன் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, 2 பசுமாடுகள் உயிரிழப்பு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் அதிரித்து வரும் ஆக்கிரமிப்புகள்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



