பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சாா்பில், சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் உதயகுமரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வினோத், முன்னாள் மாவட்டத் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பவானிசாகா் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினா் முழுவீச்சில் தோ்தல் பணியாற்றுவது, மத்திய கிழக்கில் போா் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புன்செய் புளியம்பட்டி காங்கிரஸ் நகா்மன்ற உறுப்பினா் வெங்கடாசலம் உள்ளிட்ட வட்டாரத் தலைவா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டம்

சுப்பிரமணியபுரத்தில் இண்டி கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

களக்காட்டில் ‘இண்டி’ கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

சிதம்பரத்தில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக்கேட்பு கூட்டம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


