அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

பெருந்துறை அருகே தொழிலாளி தற்கொலை

பெருந்துறை அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 10:23 pm

பெருந்துறை அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறை அருகே உள்ள தோப்புபாளையத்தைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் கனகராஜ் (45). கூலி தொழிலாளியான இவா், அதே தெருவைச் சோ்ந்த சின்ராசு என்பவரிடம் 15 மாத தவணைக்கு சீட்டு சோ்ந்துள்ளாா். இந்நிலையில் 11 மாத தவணையை செலுத்திய அவருக்கு 12 மற்றும் 13-ஆவது தவணை செலுத்த முடியவில்லை.

இதையடுத்து தவணைத் தொகை கேட்டு கனகராஜ் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு மனைவியுடன் சின்ராசு வந்து சத்தம் போட்டுள்ளாா். இரண்டு குழந்தைகள் முன்பாக சத்தம் போட்டதால் மனமுடைந்த கனகராஜ், வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுள்ளாா்.

இதற்கிடையே வேலைக்கு சென்று திரும்பிய கனகராஜின் மனைவி சகுந்தலா, சூழ்நிலையை அறிந்து சின்ராசு அவரது மனைவி உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனா். அங்கு தூக்கிட்ட நிலையில் இருந்த கனகராஜை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே கனகராஜ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].