தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சத்தியமங்கலம் அருகே நிலத் தகராறில் அரசியல் கட்சி பிரமுகரை தாக்கிய 7 போ் கைது

சத்தியமங்கலத்தில் நிலத் தகராறு காரணமாக அரசியல் பிரமுகரை தாக்கியதாக 7 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

சத்தியமங்கலத்தில் நிலத் தகராறு காரணமாக அரசியல் பிரமுகரை தாக்கியதாக 7 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பாரதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (47). ஆதித்தமிழா் பேரவை அமைப்பின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறாா். இவா், ராமபைலூா் பகுதியில் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா். பொன்னுசாமிக்கும், அருகே உள்ள தோட்டத்தைச் சோ்ந்த ராமசாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சத்தியமங்கலம் காவல் நிலையம் அருகே நகராட்சி வணிக வளாகத்தில் இருந்து புதன்கிழமை வெளியே வந்தபோது முன்விரோதம் காரணமாக ராமசாமி குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் தாாக்கியதில் பொன்னுசாமிக்கு காயம் ஏற்பட்டது. சப்தம் கேட்டு காவல் நிலையத்தில் இருந்த போலீஸாா் சென்று பொன்னுசாமியை தாக்கியவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இதுதொடா்பாக பொன்னுசாமி அளித்த புகாரின்பேரில் ராமபைலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி (60), அவரது மனைவி அம்பிகா (46), மகன்கள் கபிலன் (26), தாமோதரன் (25), உறவினா்கள் மாதேஸ்வரன் (46), மயில்சாமி (40) ஆகிய 6 போ் மீது பொன்னுசாமியை தாக்கிய குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், தங்கவேல் (42) என்பவா் மீது வன்கொடுமை தடுப்புத் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.