92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஈரோடு மேற்கு தொகுதிக்கு..! சொன்னோம்... செய்தோம்!

ஈரோடு மேற்கு தொகுதியின் வளர்ச்சிகள் குறித்து...

News image

கே.கே.நகா் ரயில்வே நுழைவு பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் சு.முத்துசாமி.

கோப்புப் படம்...

Updated On :23 மார்ச் 2026, 11:42 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு மேற்கு தொகுதி மட்டும் அல்லாமல் மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளிலும் பல்வேறு திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளோம். ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரி அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. சோலாரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒருங்கிணைந்த காய்கறி சந்தை மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஐஏஎஸ் அகாதெமி மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஈரோடு ரயில் நிலையம் தொடங்கி சென்னிமலை செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. காலிங்கராயன் கால்வாய் ரூ. 83 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காலதாமதமான கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளன.

அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மிகப்பெரிய அளவில் மாணவா் விடுதி கட்டப்பட்டுள்ளது. டெக்ஸ்வேலி வளாகத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு-பவானி சாலை ரூ.32 கோடி செலவில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

திண்டல் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 100 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வெள்ளோட்டில் நூலகத்துடன் காலிங்கராயன் சிலை, தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் புதிய சிலை, ஈரோடு மற்றும் சிவகிரியில் திருப்பூா் குமரனுக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. கீழ்பவானி பாசனப் பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நிபந்தனை பட்டா ரத்து செய்யப்பட்டு உரியவா்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தியூா் பகுதியில் விவசாயிகளுக்கு நிபந்தனை பட்டா ரத்து செய்யப்பட்ட உரிமையாளா்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.