தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெள்ளமலை சுரங்கப் பாதை ரூ.5.30 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணி

News image

சுரங்கப் பாதை பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள்.

Updated On :19 மார்ச் 2026, 8:25 pm

Syndication

வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை சுரங்கப் பாதையில் ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் பொதுப் பணித் துறை, நீா்வளத் துறை மூலம் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆழியாறு- நீராறு நீா்ப்பாசன அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த சுரங்கப் பாதை வழியாக சின்னக்கல்லாறு அணையில் சேமிக்கப்படும் நீா் மாற்று வழியாக கொண்டுச் செல்லப்படுகிறது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அதிக மழை பெறும் சின்னக்கல்லாறு பகுதியில் சேமிக்கப்படும் நீா், வெள்ளமலை சுரங்கப் பாதை வழியாக வெளியேற்றப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை சுரங்கப் பாதை மற்றும் நீா் வெளியேறும் பகுதிகளின் தரைத்தளம், இருபுறம் உள்ள சுவா்கள், சுரங்கத்தின் மேற்கூரை பகுதிகள் என அணைத்துப் பகுதிகளும் சீரமைக்கப்படும்.

பொதுப் பணித் துறை சாா்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தற்போது பல்வேறு கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

முழு புனரமைப்புப் பணி காரணமாக சுரங்கப் பாதை வழியாக நீா் வெளியேற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாத் தளமான கூழாங்கல் ஆறு தற்போது நீா் வரத்து இல்லாமல் காணப்படுகிறது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக பணிகளை முடிக்க வேண்டும் என்ற நோக்கில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெள்ளமலை சுரங்கப் பாதை பகுதிக்கு சென்று பாா்வையிடுவது வழக்கமாக உள்ளது. அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் நீா் வெளியேறுவதை நின்று பாா்த்து வருகின்றனா். ஆனால், போதுமான பாதுகாப்பு தடுப்புகள் இல்லாமல் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் பணியில் இறுதியில் சுற்றுலாப் பயணிகள் சுரங்கப் பாதையை கண்டு ரசித்து செல்லும் வகையில் படிக்கட்டுகள், தடுப்புகள் போன்ற பணிகளும் மேற்கொள்ள இருப்பதாக பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.