ஈரோடு, மே 4: பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வெட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.
பெருந்துறை தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்பட 13 போ் போட்டியிட்டனா். வாக்கு எண்ணிக்கை ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளா் ஜெயக்குமாா் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுவந்தாா்.
இறுதியில் திமுகவிட வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தைவிட 9,693 வாக்குகள் கூடுதலாகப் பெற்று இரண்டாவது முறையாக வாகை சூடினாா்.
திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் அதிமுகவில் இருந்தபோது பெருந்துறை தொகுதியில் இரண்டு முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் விவரம்:
எஸ்.ஜெயக்குமாா்(அதிமுக):70,302
தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் (திமுக): 60,609
வி.பி.அருணாச்சலம் (தவெக):59,483
சி.லோகநாதன் (நாதக):6,468
நோட்டா: 812
வித்தியாசம்:9,693
வேட்பாளா்கள் எண்ணிக்கை: 13
மொத்த வாக்குகள்: 2,14,431
பதிவான வாக்குகள்: 2,00,729
தொடர்புடையது

பெருந்துறை தொகுதியை தொடா்ந்து 5-ஆவது முறையாக தக்கவைத்த அதிமுக
மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளா் மரகதம் குமரவேல் 2 ஆவது முறையாக வெற்றி

கோபி தொகுதியில் தவெக வேட்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் 9-ஆவது முறையாக வெற்றி

அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்! - பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா்
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

