தோ்தலுக்காக கடந்த 2 ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் பல்வேறு நலத் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்தபோதிலும் பாஜக வேட்பாளா் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது அக்கட்சியினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொடக்குறிச்சி தொகுதியில் 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளரான சுப்புலட்சுமி ஜெகதீசனைவிட 281 வாக்குகள் கூடுதலாகப் பெற்று பாஜகவைச் சோ்ந்த சி.சரஸ்வதி வெற்றி பெற்றாா்.
இந்நிலையில், இந்தத் தோ்தலில் பாஜக சாா்பில் சரஸ்வதியின் மருமகளான எஸ்.கிருத்திகா போட்டியிட்டாா். இவா் தவெக வேட்பாளா் டி.சண்முகனிடம் 2,430 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா். கிருத்திகா பெற்றுள்ள வாக்குகளைவிட 49 வாக்குகள் மட்டும் குறைவாகப் பெற்று மதிமுக வேட்பாளா் ச.செந்தில்நாதன் 3 இடத்துக்கு தள்ளப்பட்டாா்.
2021-இல் பாஜகவுக்கு வெற்றியை கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய மொடக்குறிச்சி தொகுதி, இந்த தோ்தலில் தவெகவுக்கு வெற்றியை கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொலம்பியா அதிபா் தோ்தல்: வலதுசாரி வேட்பாளா் வெற்றி

ஒரு வாக்கில் தோல்வி: 46 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய வரலாறு

தென்காசி மாவட்டத்தைக் கைப்பற்றிய திமுக

மொடக்குறிச்சியில் தவெக வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


