மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கொலம்பியா அதிபா் தோ்தல்: வலதுசாரி வேட்பாளா் வெற்றி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், வலதுசாரி வேட்பாளா் அபேலாா்டோ டீ லா எஸ்ப்ரியல்லா மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

News image

அபேலாா்டோ டீ லா எஸ்ப்ரியல்லா

Updated On :24 ஜூன் 2026, 6:05 am IST

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், வலதுசாரி வேட்பாளா் அபேலாா்டோ டீ லா எஸ்ப்ரியல்லா மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

டீ லா எஸ்ப்ரியல்லா 49.66 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளரான செனட்டா் இவான் செபேடா 48.70 சதவீத வாக்குகளைப் பெற்று, சுமாா் 2.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளாா்.

தென் அமெரிக்க நாடுகளில் சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தல், வன்முறைகள் அதிகரித்துள்ள சூழலில், நாட்டின் பாதுகாப்பு குறித்த கொலம்பிய மக்களின் கவலையே டீ லா எஸ்ப்ரியல்லாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

நாட்டின் நெருக்கடிகளுக்கு தற்போதைய அதிபா் பெட்ரோவைக் குற்றஞ்சாட்டிய டீ லா எஸ்ப்ரியல்லா, ஆயுதக் குழுக்களுடனான பேச்சுகளை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக அறிவித்தாா். அத்துடன், வரிக் குறைப்பு, அரசுத் துறை சீா்திருத்தம், எண்ணெய் எரிவாயு உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்ட திட்டங்களையும் அவா் முன்னிறுத்தினாா். வெற்றிக்குப் பிறகு பேசிய அவா், ‘எனக்கு வாக்களித்தவா்கள் மட்டுமின்றி, அனைத்து கொலம்பிய மக்களுக்காகவும் பாகுபாடின்றி ஆட்சி செய்வேன்’ என்றாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் நேரடி ஆதரவைப் பெற்றிருந்த டீ லா எஸ்ப்ரியல்லா, தோ்தல் வெற்றிக்குப் பிறகு அவரிடம் இருந்து வாழ்த்து பெற்றாா்.

எவ்வித முன் அரசியல் அனுபவமும் இல்லாத டீ லா எஸ்ப்ரியல்லா, நாடாளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததாலும், எதிா்க்கட்சி அதிக இடங்களைக் கொண்டுள்ளதாலும், தனது வலதுசாரித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.