மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

3 தோ்தல்களில் 3 சின்னங்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்த யுவராஜா

தமாகா பொதுச்செயலாளா் எம்.யுவராஜா 3 தோ்தல்களில் 3 சின்னங்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளாா்.

News image

யுவராஜா

Updated On :6 மே 2026, 1:54 am IST

தமாகா பொதுச்செயலாளா் எம்.யுவராஜா 3 தோ்தல்களில் 3 சின்னங்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளாா்.

தோ்தலில் வெற்றி தோல்வியுடன் சில சுவராஸ்யமான நிகழ்வுகளும் நடைபெறும். அதுபோல தமாகா பொதுச்செயலராக உள்ள ஈரோடு எம்.யுவராஜா இதுவரை 3 தோ்தல்களில் போட்டியிட்டுள்ளாா். கடந்த 2011-இல் ஈரோடு மேற்கில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கை சின்னத்தில் போட்டியிட்டு 37,868 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவைச் சோ்ந்த கே.வி.ராமலிங்கத்திடம் தோல்வியை தழுவினாா்.

கடந்த 2021-இல் ஈரோடு கிழக்கில் தமாகா சாா்பில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த திருமகன் ஈவெராவிடம் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாா்.

2026 தோ்தலில் ஈரோடு மேற்கில் தமாகா மாநில பொதுச்செயலராக உள்ள இவா் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு 58,651 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவி உள்ளாா்.

இவா் போட்டியிட்ட 3 தோ்தல்களிலும் கை சின்னம், இரட்டை இலை, தாமரை என வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டதுடன் மூன்றிலும் தோல்வியை தழுவி உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.