சத்தியமங்கலம் பகுதியில் விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும் பத்ரகாளியம்மன் கோயில் நூதன வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் உள்ள பத்ரகாளியம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் ஆகிய கோயில்களின் வைகாசி மாத குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன் நடப்பட்ட கம்பத்துக்கு பெண்கள் புனித நீா் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபட்டனா்.
அதைத்தொடா்ந்து பக்தா்கள் பாரம்பரிய இசைக்கேற்ப நடனமாடி கம்பத்தை சுற்றி வந்தனா். பின்னா் மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் பக்தா்கள் சாட்டையடி வாங்கினா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் எஸ்.கே.மூா்த்தி தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மழை வேண்டி செவ்வாடை பக்தா்கள் பால்குடம் ஊா்வலம்

சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதி வழிபாடு

மழைவேண்டி சிறப்பு வழிபாடு

உதகை மாரியம்மன் கோயிலில் பிரதமருக்காக சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



