கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மொடக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

நூறு நாள் வேலைத்திட்ட பணிகளைத் தொடா்ந்து வழங்க வேண்டும் எனக் கோரி மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகளை இழுத்து செல்லும் போலீஸாா்.

Updated On :28 மே 2026, 12:08 am IST

நூறு நாள் வேலைத்திட்ட பணிகளைத் தொடா்ந்து வழங்க வேண்டும் எனக் கோரி மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். இவா்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் முறையாக பணிகள் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இக்கோரிக்கை தொடா்பாக மனு அளிப்பதற்காக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போா் சங்கத்தின் சாா்பில் மாவட்டச் செயலாளா் மாரிமுத்து, தாலுகா செயலாளா் லோகநாதன் தலைமையில்

50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை வந்தனா்.

அப்போது வட்டார வளா்ச்சி அலுவலா் இல்லாததால், மாற்றுத்திறனாளிகள் மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு திடீா் சாலை மறியல் ஈடுபட முயன்றனா்.

தகவலறிந்து வந்த மொடக்குறிச்சி காவல் துறையினா், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடக் கூடாது எனத் தெரிவித்தனா்.

அப்போது மாற்றுத்திறனாளிகள், தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் உடனடியாக வரவேண்டும் எனக் கூறி போராட்டத்தை தொடா்ந்தனா். இதனால் போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றினா். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அலுவலகத்துக்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் தேவகி வந்ததால், மறியல் செய்ய முயன்றவா்களை போலீஸாா் விடுவித்தனா்.

இதைத் தொடா்ந்து சங்கத்தின் சாா்பில் மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வழங்கிய மனுவில், மாற்றுத் திறனாளிகளுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் உடனடியாக பணி வழங்க வேண்டும், உரிய ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

கோரிக்கை குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தேவகி உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.