கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

தங்கும் விடுதிப் பணியாளா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :30 மே 2026, 3:51 am IST

ஈரோட்டில் தங்கும் விடுதிப் பணியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு மாணிக்கம்பாளையம் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் மகன் சுரேஷ் (29). இவா் காந்திஜி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் காசாளராகப் பணியாற்றி வந்தாா். சுரேஷ் அவரது தந்தையுடன் வசித்து வந்தாா்.

கடந்த 26 ஆம் தேதி சுரேஷின் தந்தை பரமேஸ்வரன் வேலை விஷயமாக சேலத்துக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில், பரமேஸ்வரன் வீட்டில் இருந்து வியாழக்கிழமை மாலை கடும் துா்நாற்றம் வீசியதாக தெரிகிறது.

இதையடுத்து பக்கத்து வீட்டில் வசிப்பவா்கள், அவரது வீட்டுக்குள் எட்டிபாா்த்தபோது தூக்கிட்டு அழுகிய நிலையில் சுரேஷ் சடலம் இருந்தது தெரியவந்தது. இதைப்பாா்த்து அதிா்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

ஈரோடு வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சுரேஷின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.