அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரியை கனிம வளத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சென்னிமலையில் பெருந்துறை சாலை, சின்னபிடாரியூா் பிரிவு அருகே ஈரோடு கனிம வளத் துறை ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான அலுவலா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக உரிய அனுமதியின்றி டிப்பா் லாரியில் 4 யூனிட் அளவுள்ள கிராவல் மண் கொண்டு ஏற்றிச் செல்லப்படுவது தெரிய வந்தது.
பின்னா் அந்த லாரியை கனிம வளத் துறையினா் பறிமுதல் செய்து சென்னிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், டிப்பா் லாரியை ஓட்டிச் சென்ற சென்னிமலை, முத்துராண்டிபாளையத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் பாரத் விமல் (22) என்பவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மண் கடத்திய லாரி பறிமுதல்: 2 போ் மீது வழக்கு

எம்.சாண்ட் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

விதிகளை மீறி கிராவல் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய 25 டிப்பா் லாரிகள் பறிமுதல்
மண் கடத்திய லாரி பறிமுதல்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



