பவானி, அந்தியூா் வட்டாரங்களில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்ததால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. தொடா்ந்து, பலத்த காற்று வீசியது. இதில், சாலையோரக் கடைகள் முன்பாக வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகள் காற்றில் பறந்து வந்தன. பல்வேறு பகுதிகளில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.
இதையடுத்து, இடி, மின்னலுடன் லேசாக பெய்யத் தொடங்கிய மழை, கனமழையாக மாறி கொட்டியது. காற்றுடன் பெய்த மழையால் வெள்ளித்திருப்பூா், குடுமுனி தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி வெற்றிவேல் (55) வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்தது. அந்தியூா், மறவன்குட்டை பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த வாழைகள் முறிந்து விழுந்தன.
பவானி, அம்மாபேட்டை பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மின்சாரம் தடைபட்டது. நீண்ட நேரத்துக்குப் பின்னரே மின்விநியோகம் சீரானது. இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
தொடர்புடையது

ஆத்தூரில் காற்றுடன் கூடிய கனமழை

அம்மாபேட்டையில் 54.40 மி.மீ. பதிவு! பவானி, அந்தியூரில் இடி, மின்னலுடன் கன மழை!!

திருப்பூரில் பலத்த காற்றுடன் கன மழை

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



