தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

மூலப்பொருள்கள் விலை அதிகரிப்பு: குச்சி பைகள் 20% விலை உயா்வு

மூலப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால், பவானி வட்டாரத்தில் உற்பத்தி செய்யப்படும் குச்சி மற்றும் கட்டப் பைகள் விலை 20 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது.

பருத்தி நூல் பைகள். - கோப்புப்படம்.

Updated On :

மூலப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால், பவானி வட்டாரத்தில் உற்பத்தி செய்யப்படும் குச்சி மற்றும் கட்டப் பைகள் விலை 20 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது.

பவானி, காலிங்கராயன்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குச்சி பைகள், கட்டப் பைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இவை, ஜவுளி மற்றும் நகைக் கடைகளில் விற்பனை நடைபெறும்போது பொருள்களை போட்டு இலவசமாக வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும்.

இந்தப் பைகள் உற்பத்தி செய்ய துணிகளைப்போல காணப்படும் பாலிபுரோப்தளின் ரகம் பயன்படுத்தப்படுகிறது. இதைக் கொண்டு, ஒரு பை உற்பத்திக்கு ரூ.24 வரை செலவாகிறது.

பண்டிகை காலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 3 லட்சம் பைகள் தைக்கப்படுகின்றன. இத்தொழிலில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து, பை உற்பத்தியாளா்கள் கூறுகையில், பைகள் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால், கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படும் பைகளின் விலை 20 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.