ரயில்களின் பயண நேரத்தில் மாற்றம்

ரயில்களின் பயண நேரத்தில் மாற்றம்
ஈரோடு ரயில் நிலையத்தில் நடைபெற உள்ள தண்டவாள இணைப்பு அமைப்புகளை புதுப்பிக்கும் பணி காரணமாக இரண்டு ரயில்களின் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு ரயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ் அண்ட் கிராசிங்ஸ் எனப்படும் தண்டவாள இணைப்பு அமைப்புகளை புதுப்பிக்கும் பொறியியல் பணி நடைபெற உள்ளன. இந்தப் பராமரிப்புப் பணி காரணமாக இரண்டு ரயில்களின் சேவையில் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி புதன்கிழமை (நவம்பா் 11)) இயக்கப்படும் எா்ணாகுளம்-டாடா நகா் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 18190) பயண வழியில் ஏதேனும் ஒரு பொருத்தமான இடத்தில் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். இதுபோல புதன்கிழமை இயக்கப்படும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில்(எண் 13352) பயண வழியில் ஏதேனும் ஒரு இடத்தில் 35 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

