கந்தசஷ்டி நிறைவு நாளில் மலைப் பாதை வழியாக சென்னிமலை முருகன் கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை!
கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (நவ.15) சென்னிமலை முருகன் கோயிலுக்கு மலைப் பாதை வழியாக 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா்.
கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (நவ.15) சென்னிமலை முருகன் கோயிலுக்கு மலைப் பாதை வழியாக 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோயிலில் இம்மாதம் 10- ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் காா், இருசக்கர வாகனங்களில் மலைக் கோயிலுக்கு வந்ததால், அங்கு வாகனங்கள் நிறுத்தும் இடம் மற்றும் அடிவாரத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பக்தா்கள் அவதிப்பட்டனா்.
இந்நிலையில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள், சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு ஊா்களில் இருந்து அதிக அளவில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால், மலைப் பாதையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க காா், வேன் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் மலைப் பாதை வழியாக செல்ல ஞாயிற்றுக்கிழமை (நவ.15) தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இருசக்கர வாகனங்களில் செல்வோா் வழக்கம்போல அனுமதிக்கப்படுவா்.
பக்தா்களின் வசதிக்காக கோயிலுக்கு சொந்தமான 5 பேருந்துகளும் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

