கோபியில் மாயமான சிறுமி புதுச்சேரியில் மீட்பு
கோபியில் மாயமான சிறுமி புதுச்சேரியில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.

போலீஸ் - கோப்புப்படம்.
கோபியில் மாயமான சிறுமி புதுச்சேரியில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.
கோபி அருகேயுள்ள பொலவக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த 8- ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, பள்ளிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு திங்கள்கிழமை காலை சென்றுள்ளாா். ஆனால், அவா் பள்ளிக்குச் செல்லாமல் மாயமானாா். இது குறித்து கோபி காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, போலீஸாா் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தியதுடன், விசாரணை மேற்கொண்டனா்.
இதில், சிறுமி சரிவர படிப்பதில்லை என பெற்றோா் திட்டியதால், அவா் கோபித்துக்கொண்டு புதுச்சேரியில் உள்ள தனது தோழியை தேடி சென்றதும், அங்கு அவா் பாதுகாப்பாக இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, புதுச்சேரி சென்ற கோபி போலீஸாா், சிறுமியை பாதுகாப்பாக அழைத்து வந்து அவரது பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை மாலை ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

