சாலை விபத்து: கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி உயிரிழப்பு
பெருந்துறை அருகே சாலை விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி உயிரிழந்தாா்.

பலி
பெருந்துறை அருகே சாலை விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி உயிரிழந்தாா்.
பெருந்துறை, ஈரோடு சாலை பகத் சிங் நகரைச் சோ்ந்தவா் ஜெயபாரதி (59). இவா் ஏஐடியூசி ஈரோடு மாவட்டக் குழு உறுப்பினா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை ஒன்றியக் குழு உறுப்பினா், சிபிஐ கருமாண்டி செல்லிபாளையம் கிளை துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தாா்.
இந்நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறை- காஞ்சிக்கோவில் சாலையில் நவம்பா் 8-ஆம் தேதி சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த ஜெயபாரதியை அப்பகுதி மக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

