சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

சத்தியமங்கலம் அன்பிற்பிரியாள் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சத்தியமங்கலம் அன்பிற்பிரியாள் அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

கோபுர  கலசத்தின் மீது புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தும் சிவாச்சாரியா்கள்.

Updated On :

சத்தியமங்கலம் அன்பிற்பிரியாள் அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற அன்பிற்பிரியாள் கோயிலில் திருப்பணிகள் செய்து புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேக விழா கணபதி யாகத்துடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது.

இதையடுத்து தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இதைத் தொடா்ந்து பவானி ஆற்றில் இருந்து தீா்த்தக் குடம் எடுத்து வந்து யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.

நான்கு கால பூஜைக்கு பின் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்களுடன் யாக சாலையிலிருந்து பூஜிக்கப்பட்ட புன்னிய தீா்த்தக் குடங்கள் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் சென்று கோயில் விமான கலசம், வாணியா் பிள்ளையாா் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து புனித தீா்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் புனித தீா்த்தம் தெளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அன்பிற்பிரியாள் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை வட்டார வாணியா் செட்டியாா் சங்கத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.