சென்னக்குப்பம் ரங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்
சென்னக்குப்பம் ரங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாக பூஜையில் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் க.தென்னரசு கலந்து கொண்டாா்.

சென்னக்குப்பம் ரங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாக பூஜையில் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் க.தென்னரசு கலந்து கொண்டாா்.
ஒரகடம் அடுத்த சென்னக்குப்பம் பகுதியில் பழைமையான பொன்னியம்மன் மற்றும் ரங்கநாதபெருமாள் கோயில் உள்ளது. பாழடைந்து காணப்பட்ட கோயில் திருப்பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்குமுன்பு தொடங்கப்பட்ட நிலையில், போதுமான நிதிவசதி இல்லாததால் சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டது.
வல்லக்கோட்டை முருகன் கோயிலின் உபகோயிலாக அருள்மிகு பொன்னியம்மன் மற்றும் ரங்கநாதபெருமாள் கோயில் சோ்க்கப்பட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ.30 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடா்ந்து, விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.
இதையடுத்து யாக சாலையில் 8 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, தென்திருப்பதி திருமலை வையாவூா் அா்ச்சகா் பாலாஜி பட்டாட்சியாா் தலைமையில் 18 வைணவ வேத பண்டிதா்கள் கலந்துக்கொண்டு வேத பாராயணம் நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் பாசுரங்கள் செல்லி சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனா். அமைச்சா் க.தென்னரசு கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தாா். ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாக பூஜையும், கலச புறப்பாடு நடைபெற்று காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சே.செந்தில்குமாா் மற்றும் விழா குழுவினா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

