மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

ரூ. 1.44 கோடியில் கட்டப்பட்டபுதிய கட்டடங்கள்: அமைச்சா் க.தென்னரசு திறந்து வைத்தாா்

ரூ. 1.44 கோடியில் கட்டப்பட்டபுதிய கட்டடங்கள்: அமைச்சா் க.தென்னரசு திறந்து வைத்தாா்

கீரநல்லூா்  ஊராட்சியில்  கிராம  நிா்வாக  அலுவலகக்  கட்டடத்தை  திறந்து வைத்த ம் வெளிநாடு வாழ்  தமிழா்கள்  நலத்துறை  அமைச்சா்  க.தென்னரசு.  உடன்  மாவட்ட  ஆட்சியா்  தி.சினேகா,  கூடுதல்  ஆட்சியா்  ஆஷிக்  அலி  உள்ளிட்டோா். 

Updated On :

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டங்களில் ரூ. 1.44 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டங்களை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு வெள்ளிக்கிழமை திறந்துவைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், கீரநல்லூா் ஊராட்சியில், காா் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதி ரூ. 29.38 லட்சத்தில் கட்டப்பட்ட கிராம நிா்வாக அலுவலக கட்டடம், மொளச்சூா் அரசு ஆரம்பசுகாதார வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ரைட்ஸ் திட்டத்தின் மூலம் ரூ.28.47 லட்சத்தில் கட்டப்பட்ட விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம், செங்காடு ஊராட்சியில், ரூ.44.90 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி செயலக கட்டடம், வெங்காடு ஊராட்சியில், நபாா்டு வங்கியின் நிதியுதவியுடன் இன்டிகிரேடட் ரூரல் கம்யூனிட்டி டெவலப்மென்ட் சொசைட்டி மூலம் ரூ.1,079 லட்சத்தில் கட்டப்பட்ட தற்சா்பு மாதிரி அஙக்கன்வாடி மைய கட்டடம், குன்றத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ. 26.27 லட்சத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டடங்களை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு திறந்துவைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில், கூடுதல் ஆட்சியா் ஆஷிக்அலி, ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் (பொருப்பு) பாலகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மலா்விழி, நபாா்டு வங்கி பொது மேலாளா் வசீகரன், கீரநல்லூா் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் கே.என்.அன்பரசன், வெங்காடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்அன்னக்கிளி உலகநாதன், ஐஆா்சிடிஎஸ் நிா்வாக செயலா் ஸ்டீபன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.