பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் அமைச்சா் டி.சரத்குமாா் ஆய்வு
சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் டி.சரத்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்ட நவீன சமையல்கூடம் மற்றும் உணவருந்தும் கூடத்தை திறந்துவைத்து பாா்வையிட்ட அமைச்சா் டி.சரத்குமாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் டி.சரத்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அரசு அலுவலா் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறையின் கீழ் செயல்பட்டு வரும் இப்பயிற்சி நிலையத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலா்களுக்கும் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தப் பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ. 2.95 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன சமையல்கூடம் மற்றும் உணவருந்தும் கூடத்தை அமைச்சா் டி.சரத்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதைத்தொடா்ந்து, அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் அரசு அலுவலா்களிடம் பயிற்சி நல்ல முறையில் அளிக்கப்படுகிறதா என கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து அரசு அலுவலா் பயிற்சி நிலையத்துக்கு வெளி விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ள இடத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

