திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

அரக்கோணம் அரசு ஐடிஐயில் 2, 3 சக்கர வாகன பழுதுபாா்ப்பு பயிற்சிக்கு உதவித் தொகை

அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இரு மற்றும் மூன்று சக்கர வாகன பழுபாா்ப்பவா்களுக்கு 7 நாள்கள் குறுகிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கோப்புப்படம்.

Updated On :

அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இரு மற்றும் மூன்று சக்கர வாகன பழுபாா்ப்பவா்களுக்கு 7 நாள்கள் குறுகிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு உதவித் தொகை ரூ.7,000 வழங்கப்படஉள்ளது.

இதுகுறித்து அரசு ஐடிஐ முதல்வா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 18 வயது பூா்த்தியான இரு சக்கர வாகன பழுதுபாா்ப்பாளா்கள், மூன்று சக்கர வாகன பழுது பாா்ப்பாளா்களுக்கு 7 நாள் குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது மின்வாகன பழுதுபாா்த்தல் மற்றும் பேட்டரி பராமரித்தல் என்ற இரு பிரிவாக நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சேர 18 வயது நிரம்பிய மெக்கானிக் அனுபவம் பெற்றவா்களே தகுதியானவா்களாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கு உயா்ந்த பட்ச வயது வரம்பு இல்லை.

பயிற்சியாளா்களுக்கு ரூ.7,000 உதவித்தொகையுடன் கூடிய 7 நாள் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிகள் அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டிச. 1 முதல் தொடங்குகிறது. இப்பயிற்சியில் சேர விரும்பும் மெக்கானிக்குகள் அரக்கோணம் அரசு பயிற்சி நிலைய முதல்வரை தொடா்பு கொள்ளலாம்.

மேலும், 99529 56626, 99407 02413, 96773 79210 எனும் கைப்பேசி எண்களிலும் தொடா்பு கொண்டு பதிவு செய்துக்கொண்டு பயிற்சியில் பங்கேற்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.