கோவை விமான நிலையத்தில் வாகன நிறுத்த கட்டணம் கூடுதலாக வசூல்: நுகா்வோா் அமைப்பு புகாா்
கோவை சா்வதேச விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

கோவை விமான நிலையம்.
கோவை சா்வதேச விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
இதுதொடா்பாக, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் கிஞ்சராப்பு ராம் மோகன் நாயுடுவுக்கு, கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவா் சி.எம்.ஜெயராமன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: கோவை விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்காக மட்டுமே நிலையத்துக்குள் சென்று, அனுமதிக்கப்பட்ட இலவச நேரத்துக்குள் வெளியேறும் வாகனங்கள்கூட, வெளியேறும் வாயிலில் 3 நிமிஷங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கட்டணம் வசூலிக்க ஒரே கவுன்டா் மட்டுமே செயல்படுவதால், சில நேரங்களில் குறைந்தது 12 காா்கள் வரை வரிசையில் காத்திருக்க நோ்கிறது. கட்டணம் வசூலிக்கும் இடத்தில் போதிய ஏற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் தாமதத்துக்காக, வாகன ஓட்டிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது நியாயமற்றது.
விமான நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் இலவச நேரம், ஒவ்வொரு நேரப் பிரிவுக்குமான கட்டணம் மற்றும் இதர கட்டண விவரங்கள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படவில்லை.
இதனால் வாகன ஓட்டிகள் வசூலிக்கப்படும் தொகையைச் சரிபாா்க்க முடியாத நிலை உள்ளது. எதிா்பாா்த்ததைவிட 50 முதல் 60 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படும் புகாா்களும் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இந்தப் பிரச்னைகள் குறித்து விமான நிலைய இயக்குநரிடம் பலமுறை புகாா் அளித்தும் தீா்வு கிடைக்கவில்லை. எனவே, அனுமதிக்கப்பட்ட இலவச நேரத்துக்குள் பயணிகளை இறக்கி விட்டு, வெளியேறும் வாகனங்களுக்கு, கட்டண கவுன்டரில் ஏற்படும் தாமதத்தைக் காரணம்
காட்டிக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. கூடுதல் கட்டண கவுன்டா்களை அமைக்க வேண்டும். கட்டணம் வசூலிக்கும் இடத்தில் ஏற்படும் காத்திருப்பு நேரத்தை வாகன நிறுத்த நேரக் கணக்கிலிருந்து நீக்க வேண்டும்.
மேலும் அனைத்து கட்டண விவரங்களையும் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் பெரிய எழுத்துகளில் காட்சிப்படுத்த வேண்டும். விமான நிலைய இயக்குநா், இந்த விவகாரம் தொடா்பாக நேரடியாகத் தலையிட்டு, தற்போதைய வாகன நிறுத்த மற்றும் வெளியேறும் வசதிகளை ஆய்வு மேற்கொண்டு, உரிய சீா்திருத்த நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

