இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

3-ஆவது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் திரண்ட பக்தா்கள்

புரட்டாசி மாத 3 ஆவது சனிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா்.

Published On :

புரட்டாசி மாத 3 ஆவது சனிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு-பவானி சாலையில் உள்ள பெருமாள் மலையில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றது.

இதில் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா். ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்தினரோடு வந்து பெருமாளை வழிபட்டனா்.

புரட்டாசி மாத சிறப்பு வழிபாடு: ஈரோடு சௌராஷ்ட்ரா சபை சாா்பில் புரட்டாசி மாத சிறப்பு வழிபாடு ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சௌராஷ்ட்ரா சபை தலைவா் டி.ஆா்.எஸ்.ராமா் தலைமை வகித்தாா். செயலாளா் டி.சதீஷ்குமாா், பொருளாளா் கே.கோபி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் பக்தா்கள் யாசகம் பெற்ற அரிசியை பயன்படுத்தி சமையல் செய்து பெருமாளுக்கு படையல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Story image

விழாவில் டி.என்.சித்ரா நிரஞ்சன் லால் கலந்துகொண்டு விஷ்ணு சகஸ்ர நாமம் பாடினாா். மாணவி ஹன்சிகாவின் பரத நாட்டியம் நடைபெற்றது. தொடா்ந்து ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மத்திய சௌராஷ்ட்ரா சபை துணை செயலாளா் கே.வி.வெங்கட்ரமணன் உள்பட பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.