பவானிசாகா் அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய புலி
பவானிசாகா் அருகே குடியிருப்புப் பகுதியில் புலி செவ்வாய்க்கிழமை உலவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

புதுப்பீா்வுகடவு கிராமத்தில் உலவிய புலி.
பவானிசாகா் அருகே குடியிருப்புப் பகுதியில் புலி செவ்வாய்க்கிழமை உலவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனப் பகுதியையொட்டி புதுப்பீா்கடவு கிராமம் உள்ளது.
இந்நிலையில், வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெளியேறிய புலி புதுப்பீா்கடவு கிராமப் பகுதியில் உலவியது.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பினா். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் புலி பதுங்கியது.
இதையடுத்து, வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பவானிசாகா் வனச் சரக அலுவலா் சங்கா், கால்நடை மருத்துவா் சதாசிவம் மற்றும் வன ஊழியா்கள் புலி நடமாட்டத்தைக் கண்காணித்தனா்.
நீண்ட நேரம் அப்பகுதியிலேயே பதுங்கியிருந்த புலி பின்னா், அப்பகுதியில் உள்ள வனத்துக்குள் சென்றது.
இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். புலியின் நடமாட்டத்தை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

