திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்: போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப் பாதையில் தக்காளி பாரம் ஏற்றிய வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்ததால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான வாகனம்.
திம்பம் மலைப் பாதையில் தக்காளி பாரம் ஏற்றிய வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்ததால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகம் - கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை உள்ளது.
இந்நிலையில், கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு சரக்கு வாகனம் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது.
திம்பம் மலைப் பாதையில் 4-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது. மேலும், வாகனத்தில் இருந்த தக்காளி பழங்கள் அனைத்தும் சாலையில் கொட்டின. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வனத் துறையினா் சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தினா். இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

