திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்ல 2-ஆவது நாளாக தடை!திருப்பரங்குன்றம் தீபம்! தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜிநாமா செய்ய முடிவு?தங்கம் விலை புதன்கிழமை (நவ. 25) சவரனுக்கு ரூ. 2,360 குறைவு!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் சம்மன்!உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியில்லை! - அபிஜீத் தீப்கேதிருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப் பதிவு!2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடைகோரி கா்நாடக அரசு மனு

திம்பம் மலைப் பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் சனிக்கிழமை 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திம்பம்  மலைப் பாதையில்  போக்குவரத்து  பாதிப்பு  காரணமாக  நின்ற  லாரிகள்.

Updated On :

திம்பம் மலைப்பாதையில் சனிக்கிழமை 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தமிழக, கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் காரப்பள்ளம் சோதனைச் சாவடி மற்றும் பண்ணாரி சோதனைச் சாவடியில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

தொடா் விடுமுறை என்பதால் சனிக்கிழமை ஆசனூா் மலைப் பகுதியை காண்பதற்கு வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் ஒரே நேரத்தில் இரவு வீடு திரும்பும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் திம்பம் மலைப் பாதையில் வாகனங்கள் செல்லமுடியாமல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.

இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நிலையில், பேருந்தில் பயணித்த பயணி ஒருவா் தனது குழந்தையை பேருந்தின் மேற்புற கைப்பிடியில் தொட்டில் கட்டி தாலாட்டி தூங்க வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.