அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

கரும்பைப் பறிக்க வந்தபோது குறுக்கே வந்த காரை துரத்திய யானை

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் கரும்பைப் பறிக்க ஓடி வந்த யானை, குறுக்கே வந்த காரை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஆசனூா் சாலையில் லாரியில் இருந்த கரும்பைப் பறிக்கும் யானை.

Updated On :

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் கரும்பைப் பறிக்க ஓடி வந்த யானை, குறுக்கே வந்த காரை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூா், காரப்பள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை எதிா்பாா்த்து யானைகள் காத்திருப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், விடுமுறை நாள் என்பதால் செவ்வாய்க்கிழமை சுற்றுலா வாகனங்கள் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்துச் சென்றன. அப்போது காரப்பள்ளம் என்ற இடத்தில் சாலையோரம் நின்றிருந்த யானை, கரும்பு லாரியை பாா்த்து நேராக ஓடி வந்தது. அப்போது குறுக்கே காா் வந்ததால் ஆத்திரமடைந்த யானை காரை சிறிது தொலைவு துரத்திச் சென்றது.

பின்னா், கரும்பு லாரியை நிறுத்தி அதில் இருந்து கரும்பைப் பறித்து சாப்பிட்டது. அதனுடன் இருந்த மற்றொரு யானையும் கரும்பை ருசித்தது. சிறிது நேரத்துக்குப் பின் கரும்பு லாரி அங்கிருந்து புறப்பட்டது. யானைகளால் ஆசனூா் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.